இயேசு பாடல்கள்Jesus Songbook

வேதாகமம் › சங்கீதம்

சங்கீதம் 142 Psalm 142

ஒரு வசனத்தைத் தொட்டால் நகலெடுக்கலாம், பகிரலாம், அதிலிருந்து திரையில் காட்டலாம் · Tap a verse to copy it, share it, or start the screen from it.

1

யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன்.

I cried unto the LORD with my voice; with my voice unto the LORD did I make my supplication.

2

அவருக்கு முன்பாக என்னுடைய சஞ்சலத்தை ஊற்றுகிறேன்; அவருக்கு முன்பாக என்னுடைய நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன்.

I poured out my complaint before him; I shewed before him my trouble.

3

என்னுடைய ஆவி என்னில் தியங்கும்போது, நீர் என்னுடைய பாதையை அறிந்திருக்கிறீர்; நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணிவைத்தார்கள்.

When my spirit was overwhelmed within me, then thou knewest my path. In the way wherein I walked have they privily laid a snare for me.

4

வலதுபக்கமாகக் கண்ணோக்கிப் பாரும், என்னை அறிவார் ஒருவரும் இல்லை; எனக்கு அடைக்கலமில்லாமற் போனது; என்னுடைய ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை.

I looked on my right hand, and beheld, but there was no man that would know me: refuge failed me; no man cared for my soul.

5

யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீரே என் அடைக்கலமும், உயிருள்ளோர் தேசத்திலே என்னுடைய பங்குமாக இருக்கிறீர் என்றேன்.

I cried unto thee, O LORD: I said, Thou art my refuge and my portion in the land of the living.

6

என்னுடைய கூக்குரலுக்குச் செவிகொடும், நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்; என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும், அவர்கள் என்னிலும் பலவான்களாக இருக்கிறார்கள்.

Attend unto my cry; for I am brought very low: deliver me from my persecutors; for they are stronger than I.

7

உமது பெயரை நான் துதிக்கும்படி, என்னுடைய ஆத்துமாவைக் காவலுக்கு நீங்கலாக்கிவிடும்; எனக்கு நீர் தயவு செய்யும்போது நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளுவார்கள்.

Bring my soul out of prison, that I may praise thy name: the righteous shall compass me about; for thou shalt deal bountifully with me.

← சங்கீதம் 141 சங்கீதம் 143 →

Tamil: Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0.
English: King James Version (KJV), public domain.